பிரித்தானியாவில் தெரேசா மேவுக்கு பதிலாக பிரதமர் பொறுப்புக்கு வர வாய்ப்பு கொண்ட அமைச்சர் ஒருவர், தமது போதை மருந்து பழக்கத்தை நியாயப் படுத்தியுள்ளது விவாததை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் மைக்கேல் கோவ்வே தமது போதை மருந்து பழக்கத்தை பொதுவெளியில் நியாயப் படுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அவர் கூறுகையில், முன்னர் தமக்கிருந்த போதை மருந்து பழக்கம் குறித்து தாம் மிகவும் வருந்துவதாக தெரிவித்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தாம் அந்த பழக்கத்தில் சிக்கியிருந்ததாக கூறும் அமைச்சர் கோவ், அது ஒரு தவறான பழக்கம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் கடந்த கால தவறுகள் உங்களைத் தகுதியற்றதாக மாற்றும் என தாம் நம்பவில்லை எனவும் கோவ் சூசகமாக பதிவு செய்துள்ளார்.
தெரேசா மே பிரதமர் பதவியில் இருந்து திடீரென்று விலகிய நிலையில், பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற விவாதம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.
ஒப்பந்தம் ஏதுமற்ற பிரக்சிற் தொடர்பில் சாதக பாதகங்களை அரசியல் தலைவர்கள் கூடி விவாதித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமராக போட்டியிடும் வேட்பாளர்கள் எதிர்வரும் திங்களன்று அறிவிக்கப்பட வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஜூலை மாதம் இறுதிக்குள் பிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் என அறிவிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.