நோய்வாய்ப்பட்ட சிறுவனுக்காக ரொனால்டோ செய்த காரியம்!

நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஒரு நோய்வாய்ப்பட்ட சிறுவனுக்காக பேருந்தை நிறுத்தி சிறுவனுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரானது போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்று வருகிறது.

சுவிற்சர்லாந்து அணிக்கெதிராக நடைபெற்ற அரையிறுதி போட்டியில், ரொனால்டோ ஹாட்ரிக் கோலடித்து கைகொடுத்ததால், அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், 11 வயதான எட்வர்டோ மொரிரா என்கிற லுகேமியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ‘கிறிஸ்டியானோ, என்னை ஒருமுறை கட்டிப்பிடியுங்கள்’ என எழுதப்பட்டிருந்த ஒரு பதாகையுடன் நின்றுகொண்டிருந்துள்ளான்.

இதனை பார்த்த ரொனால்டோ, உடனடியாக வீரர்களின் பேருந்தை நிறுத்திவிட்டு அந்த சிறுவனை கட்டியணைத்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.