வலுப்பெற்ற புயல் சின்னம் கொட்டித்தீர்க்க போகும் மழை.!

ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டு பருவமழை மிகவும் தாமதமாக தொடங்கியது.

தென்மேற்கு பருவக் காற்று அரபிக்கடலில் வலுவடைந்திருப்பதாகவும், தெற்கு அரபிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு, குமரிக்கடல் பகுதிகளில் மேகங்கள் அதிகளவு உருவாகியிருக்கின்றது. எனவே, கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கபட்டது.

இதனை தொடர்ந்து, தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு உள்ளிட்ட பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியது.

தற்போது, 48 மணி நேரத்தில் இது தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரபிக்கடல் நோக்கி நகர்ந்து, அதற்கு பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.