பிரபல செல்லமே பட நடிகர் காலமானார்..

கன்னட மாநிலத்தை சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட் இவரது (வயது 81) இவர் கன்னட மொழியில் எழுத்தாளர், நடன ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.

இவர் 40 ஆண்டுகாலமாக நடனங்களை இயக்கி வருகிறார். இவர் ஒரு நடிகராக, இயக்குனராக மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இந்திய திரைத்துறையில், இன்றும் அவர் நிலைத்து நிற்கிறார். இதனால் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவருக்கு இந்திய அரசாங்கத்தின் மூலமாக பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் போன்ற உயரிய விருதுகள் வழங்கப்பட்டது. தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே போன்ற படங்களில் குணசித்திர வேடம் மற்றும் வில்லன் ஆகிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், கிரிஷ் ரகுநாத் கர்னா இன்று காலை பெங்களுருவில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.