இது என்ன உடை.. தான்யாவை பயங்கரமாக கலாய்த்த சதீஷ்..

குறும்படங்களில் நடித்து தன்னை தயார் செய்துகொண்ட தான்யா பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் பெயர்போன நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 7 ஆம் அறிவு படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

அதனையடுத்து காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவருக்கு தெலுங்கு சினிமாவிலும் லக் அடித்தது. அதனை தொடர்ந்து தற்போது கன்னடம் மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அந்தவகையில் படங்களை தொடர்ந்து ‘வாட்ஸ்அப் வேலைக்காரி’ என்ற வெப் சீரியலில் நடித்துவரும் தான்யா சமீபத்தில் காமெடி நடிகர் சதிஷுடன் இணைந்து சைமா விருது வழங்கும் விழா ஒன்றை தொகுத்து வழங்கினார். அப்போது சதீஷ், ஆண்கள் அணியும் ஜாக்கெட் ஒன்றை அணிந்திருந்தார். அதனை கிண்டல் செய்யும் விதமாக இதெல்லாம் ஒரு டிரஸ்ஸா என தான்யா கிண்டலடித்தார்.

உடனே சதிஷ் தன்யாவை மேடைக்கு பின்னால் திரும்பி அங்கு என்ன எழுதியிருக்கிறது படியுங்கள் என கூற சட்டென திரும்பிய தான்யாவின் உடையை சதீஷ் மோசமாக கலாய்த்த நியமாக பார்த்தால் நீங்கள் தான் ஜாக்கெட் அணியவேண்டுமென கூறி சதீஷ் கிண்டலடிக்க, அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். இதனால் தான்யாவிற்கு கடும் சங்கடமாகிவிட்டது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் புதிய அவதாரம் எடுத்து பரவி வருகிறது. பலர் பல விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்..