“இத திரும்ப செய்யக்கூடாது” பொது மேடையிலேயே ஸ்டாலினிற்கு எச்சரிக்கை.!

மக்களவை மற்றும் இடைத் தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி செலுத்தும் கூட்டம், நேற்று திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், “நாடாளுமன்ற தேர்தல் முடிவானது, தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என கூறியவர்கள் வாயில் வேட்டு வைத்திருக்கிறது.

சில ஊடகங்கள் தேர்தல் முடிவுக்கு பின்னர் எனக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்க உள்ளதாக கூறி வருகிறது. நான் திமுகவின் உறுப்பினராக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன். நான் தெருவில் இறங்கி பிரச்சாரம் செய்தாவது திமுக தலைவரை முதல்வராக அமர வைப்பேன் அதுதான் எனது கடமை.

இந்தியாவையே திமுகவின் வெற்றி திரும்பிப் பார்க்கச் செய்தது. அதற்கு காரணம் மோடி எதிர்ப்பலை மட்டுமல்ல. ஸ்டாலினின் ஆதரவாளர்கள் தான். நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும், இனி வரும் தேர்தல்களில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்காமல், திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்.” என அவர் பேசியுள்ளார்.

காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு மக்களவை தேர்தலில் திமுக அதிகப்படியான தொகுதிகளை ஒதுக்கியதே உதயநிதியின் இந்த கருத்தை அதற்கு காரணம் என பரவலாக பேசப்படுகிறது.