தேனி மாவட்டத்தில் உள்ள போடி சங்கராபுரத்தை சார்ந்தவர் சக்தி கலா (வயது 35) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் கேரள மாநிலத்தில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். மாதம் தோறும் குடும்ப செலவுகளுக்காக பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த பணத்தை வங்கியில் சேர்த்து வைப்பதற்கு அங்குள்ள தனியார் வங்கிக்கு சென்று வந்த நிலையில்., அதே வங்கியில் பணியாற்றி வரும் கார்த்திகேயன் (வயது 28) என்ற ஊழியர் வங்கியில் கணக்கை புதியதாக துவங்குவதற்கு உதவி செய்துள்ளார். இதற்கு பின்னர் சக்தி கலாவுக்கு தொடர்பு கொண்ட கார்த்திகேயன் அடிக்கடி பேசி வந்துள்ளார்.
இந்த சமயத்தில்., இவரது குடும்பத்தின் ஏழ்மை நிலையை அறிந்து கொண்டு வங்கியிலேயே பணியை வாங்கி தருவதாக ஆசை வார்த்தையை கூறி கம்பத்திற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அங்குள்ள தனியார் விடுதிக்கு அதிகாரிகள் வந்துள்ளதாக கூறி., அவரை அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியான பெண் பெரும் மன வேதனைக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த தருணத்தில்., சில நாட்கள் கழித்த பின்னர் சக்தி கலாவை சந்தித்த கார்த்திகேயன்., உன்னை பலாத்காரம் செய்த காட்சியை விடியோவாக பதிவு செய்துள்ளேன் என்றும்., நான் ஒத்துழைக்க கூறும் சமயத்தில் வராவிட்டால் விடியோவை இணையத்தில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளான். இதனையடுத்து இதை கூறியே பல முறை கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.
இதற்கு பின்னர் இதனை உபயோகம் செய்து அவனது நண்பர்களுக்கும் பெண்ணை விருந்தாக்கி., அதனையும் வீடியோ கட்சியாக பதிவு செய்துள்ளான். இந்த நிலையில்., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கார்த்திகேயன் மற்றும் அவனது நண்பர்கள் அன்பு., சதீஷ்., பாண்டி., ஈஸ்வரன் என்று அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளுக்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு கொடூர முறையில் உட்படுத்தியுள்ளனர்.
இந்த பலாத்காரம் குறித்த விவகாரம் சக்தி கலாவின் கணவருக்கு தெரியவரவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறியுள்ளார். இதுமட்டுமல்லாது வீடியோ காட்சிகள் கொடூரர்களின் வசம் உள்ளது., அவர்கள் வீடியோ காட்சிகளை வெளியிட்டால் என்ன செய்வது என்று கூறி கதறியழுத்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொள்ளாத சக்தி கலாவின் கணவர் அவரை ஏற்க மறுத்து., குழந்தைகளுடன் கேரளாவிற்கு செல்ல முடிவு செய்த நிலையில்., தனது வாழ்க்கையே சீரழித்ததை எண்ணி., அங்குள்ள காவல் நிலையத்தில்., இந்த விஷயங்களை குறிப்பிட்டு., கார்த்திகேயன் மற்றும் அவனது நண்பர்கள் 12 பேர் பலாத்காரம் செய்ததாகவும்., வீடியோ பதிவு செய்து மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன் மற்றும் ஈஸ்வரனை கைது செய்த நிலையில்., இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.