இலங்கை அணியின் அனுபவம் உள்ள வேகப்பந்து வீச்சாளர் லாஸித் மலிங்கா அவர்கள். இலங்கை செல்வதாக தகவல்கள் வந்துள்ளன. கொழும்புவில் வசித்த லாஸித் மலிங்கா வின் மாமியார் இயற்கை எய்தினார்.
இதையடுத்து லாஸித் மலிங்கா வின் மாமியார் காந்தி பெரேதா அவர்களின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நாடு திரும்புவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இன்றைய போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் லாஸித் மலிங்கா விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிக்கு பிறகு அவர் இலங்கைக்கு சென்று இறுதி அஞ்சலியில் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மீண்டும் ஜூன் 15 ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் போட்டியில் விளையாடுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.