எப்பவும் உற்சாகத்துடன் இருக்கணுமா.?

இரவு நேரங்களில் கடுமையான அசதியில் உறங்கினாலும்., காலை எழுந்தவுடன் ஒரு விதமான சோகத்தை நாம் உணர்ந்துகொள்வோம்., அந்த சமயத்தில் குடிப்பதற்கு தேநீர் அல்லது கொட்டை வடியிலை நீரானது கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பதை யோசனை செய்வோம். நமது உடலை சுறுசுறுப்பாக்குவதற்கு தேநீர் அருந்தித்தான் சுறுசுறுப்பாகவேண்டும் என்ற அவசியமில்லை., பல வழிமுறைகள் உள்ளன.

காலை எழுந்தவுடன் சிறிது நேரம் சூரிய ஒளியானது உடலில் படும் வகையில் வெயிலில் நிற்கவேண்டும்., இதன் மூலம் நமது உடலுக்கு தேவையான வைட்டமின்-டி ஆனது கிடைக்கிறது. இதன் மூலம் மனநிலையானது உற்சாகமடைந்து சுறுசுறுப்பாக இருக்க உதவி செய்கிறது.

காலையில் எழுந்தவுடன் நமது அறையில் இருக்கும் அன்றைய தட்ப வெப்ப நிலையில் இருக்கும் நீரில் குளிக்க வேண்டும்., இதன் மூலம் உடலுக்கு தேவையான மின் அதிர்வுகளை வழங்கி., இரத்த ஓட்டத்தை ஊக்கப்படுத்தி உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்கும்.

சிரிப்பு என்ற ஒரு மருந்திற்கு சிறந்த மருந்து இன்று வரை கிடையாது. நமது சிரிப்பின் மூலம் உடலில் உள்ள ஆக்சிசனின் அளவானது வெகுவாக கூடும்., இதன் மூலம் இருதயம் மற்றும் நுரையீரலானது சிறந்த முறையில் இயங்கும்.

உடலில் ஏற்படும் சோர்வின் காரணமாக உடலின் நீர் சத்தானது வெகுவாக குறையும்., இதன் காரணமாக இரவு உறங்கும் போது தொண்டை வறட்சியானது ஏற்படும்., இதன் காரணமாக உறங்குவதற்கு முன்னதாக நீரை அருந்திவிட்டு உறங்குங்கள்.

நமது கால்களால் சிறிது தூரம் நடந்து கொடுங்கள்., இதன் மூலம் நமது இரத்த ஓட்டமானது சீராகும்.

மேலும்., தினம் தினம் குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது தியானத்தை மேற்கொள்ளுங்கள்., இதன் மூலம் உடலின் சக்தியானது அதிகரிக்கும்.