ரயில்வே நிலையத்தில் ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து கொட்டிய பண மழை!

லண்டன் ரயில்வே நிலையத்தில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து அதிக பணம் வெளியேறியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லண்டன் மேஃபேர் பகுதியில் சுரங்கப்பாதையினுள் இயங்கி வரும் ரயில்வே நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பணம் எடுக்க சென்றவரின் முன், திடீரென ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து அதிக பணம் கொட்ட ஆரம்பித்தது.

அங்கு அதிகமான பயணிகள் நின்றுகொண்டிருந்ததால், இதனை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம் அங்கு நின்றிருந்த பொலிஸார், பயணிகள் யாரும் பணத்தை எடுக்க முயற்சிக்க கூடாது என அங்கு பாதுகாப்பு கொடுக்க ஆரம்பிக்கிறார்.

Bond Street Bitcoin ATM spitting out tons of money! from r/Bitcoin

இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலானதை அடுத்து, இயந்திரத்திற்கு சொந்தமான நிர்வாக இயக்குனர் கூறுகையில், அந்த இயந்திரத்தின் முன் நின்றுகொண்டிருந்த நபர் தான் அவ்வளவு தொகையை வெளியில் எடுத்துள்ளார்.

லண்டன் தொகையில் பெரிய மதிப்பு என்பதால் இயந்திரம் சற்று குழப்பமடைந்து பணத்தை வேகமாக வெளியில் தள்ளியுள்ளது என தெரிவித்துள்ளார்.