கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் உள்ளடங்கிய குழுவொன்று நேற்று விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் பாதுகாப்பு தரப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் குழுவினருக்கு மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் பாதுகாப்பு தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அத்துரலிய ரத்ன தேரர் உட்பட குழுவினரை உள்ளே செல்ல பாதுகாப்பு தரப்பினர் அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.