25 வருடங்களுக்கு முன் மகனை தொலைத்த தாய்க்கு அடுத்தடுத்து வந்த அதிர்ச்சி!

சீனாவில் தன்னுடைய மகன் என நினைத்து ஒரு ஆண் குழந்தையை வளர்த்து வந்த தாய்க்கு 26 வருடங்களுக்கு பின் பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

சீனாவை சேர்ந்த ஜு ஜியாஜுவான் (53) என்கிற தாய் கடந்த 1992ம் ஆண்டு தன்னுடைய மகனை வீட்டில் வேலை பார்த்த பெண்ணிடம் பறிகொடுத்துள்ளார்.

இதுகுறித்து பொலிஸாரிடம் தகவல் கொடுத்து அவர்களின் முயற்சியுடன் 3 வருடங்களுக்கு பின்னர், குழந்தையை கண்டுபிடித்தார்.

1995ம் ஆண்டு ஹெனான் மாகாணத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட குழந்தைகளின் விவரங்களை, ஜியாஜுவானிடம் பொலிஸார் கொடுத்துள்ளனர்.

அதில் இருந்த ஒரு குழந்தையின் முகம் தன்னுடன் ஒத்துப்போனதால் அது தன்னுடைய குழந்தை என சந்தேகித்துள்ளார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ சோதனையிலும், ஜியாஜுவானின் குழந்தை என முடிவு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜியாஜுவானின் பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்த He Xiaoping (49) என்கிற பெண், அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினார்.

என்னுடைய இளம்வயதில் எனக்கு பிறந்த இரண்டு ஆண் குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர். ஜோதிடம் பார்க்கும் ஒருவர் கூறியதை கேட்டு, வீட்டு வேலையாள் போல பொய்யான தகவலின் அடிப்படையில் ஜியாஜுவான் வீட்டில் வேலைக்கு சேர்ந்தேன்.

ஒரு நாள் குழந்தையை சந்தைக்கு என்னுடன் கூட்டி செல்கிறேன் என அவர்களிடம் அனுமதி வாங்கினேன். ஆனால் குழந்தையை சந்தைக்கு எடுத்து செல்லாமல், அருகாமையில் உள்ள வேறு நகரத்திற்கு எடுத்து சென்று, ஜியாஜுவான் வீட்டிற்கு திரும்பவில்லை.

அந்த குழந்தையை என்னுடைய மகன் போலவே வளர்த்தேன். அவன் வந்த நேரம் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவனும் சொந்த அம்மாவை போலவே நினைத்தான்.

சமீபத்தில் ஜியாஜுவானின் பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்தேன். நான் செய்த தவறு என் மனதை வருட ஆரம்பித்துவிட்டது. காணாமல் போன அவர்களுடைய குழந்தை என்னிடம் தான் உள்ளது. அவர்களிடம் சேர்க்க உதவி செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியானது அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், He Xiaoping-விடம் இருந்த லியு ஜின்ஸின் (26) என்கிற குழந்தை தான் உண்மையான குழந்தை என்பதும், 1993-ல் அரசாங்க ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை சொந்த குழந்தை இல்லை என்பதும் தெரியவந்தது.

இதனால் கடும் கோபத்திற்குள்ளான ஜியாஜுவான், என் மகனை திருடி சென்றதற்காக நான் He Xiaoping-ஐ மன்னித்து விடுகிறேன். ஆனால் தவறு செய்த அரசு ஊழியர்கள் மற்றும் டிஎன்ஏ பரிசோதனையால் நான் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன்.

இதற்கு இழப்பீடாக 2.95 மில்லியன் (£ 336,000) யூரோ வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை கேட்டறிந்த நீதிபதி, 1995ம் ஆண்டு போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் தவறுதலாக முடிவு வந்திருக்கலாம் எனக்கூறி வழக்கின் திகதியை மாற்றி அறிவித்து உத்தரவிட்டார்.