சசிகலா விடுதலை…..! அதிமுக ஒற்றை தலைமை சூழ்ச்சி.!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக அடையாளப்படுத்தப்பட்டவர் சசிகலா. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் குற்றம் உறுதிபடுத்தப்பட்டு அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

தற்பொழுது, இம்மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கின்றனர். சசிகலா சிறைக்கு சென்று இரண்டரை வருடங்கள் உருண்டோடி விட்டது. இந்நிலையில், நன்னடத்தை விதிகளின் கீழ் சசிகலாவை விடுவிக்க கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் மாநில அரசுக்கு பரிந்துரை செய்து இருப்பதாக சில தகவல்கள் வெளியாகின்றது.

இந்த தகவல்கள் ஓரளவுக்கு நம்பும் படியே இருக்கின்றது. மாநில அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டால், சசிகலா வரும் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரியில் விடுதலையாக வாய்ப்பு இருக்கின்றது. 2021 ஆம் ஆண்டு சசிகலாவின் சிறை தண்டனை முடிவடைகிறது.

நன்னடத்தை காரணமாக அவரை ஓராண்டுக்கு முன்பே விடுதலை செய்யப்படலாம். ஆனால், சிறைத்துறை இந்த ஆண்டே அவரை விடுதலை செய்ய பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. அதிமுகவின் இரட்டை தலைமை, ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்துள்ள நிலையில், சசிகலா விடுதலை செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.