அபிநந்தனை குறித்து சர்ச்சை வீடியோ! விளக்கமளித்த சானியா.!!

இந்திய மற்றும் பாகிஸ்தான் விளையாடும் போட்டியை விளையாட்டாக பாருங்கள் என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி பற்றி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஊடகங்களிலும், விளம்பரங்களிலும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாஸ் டிவி, அபிநந்தன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதை வீடியோ பதிவு ஒன்றை வைரலாக சமூக வலைதளங்களில் வெளியானது.

தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. அந்த வீடியோ இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆட்டத்துடன் தொடர்புபடுத்தி அந்த உரையாடலை நகைச்சுவையான முறையில் வெளியிட்டுள்ளதாக மிர்சா தெரிவித்துள்ளார்.

இந்த விளம்பரத்துக்கு இந்திய ரசிகர்களும் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.இரு தரப்பிலும் தர்ம சங்கடமான முறையில் வருத்தம் அளிக்கிறது என்று இந்திய டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர சோயப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்சா கூறினார்.