நரம்புத்தளர்ச்சி ஏற்பட இது தான் காரணம்!

நரம்புத்தளர்ச்சி என்பது நரம்புகள் தளர்வதை குறிப்பிடுவது என்பது அர்த்தமில்லை. நமது மூளையானது ஒரு இயந்திரம் போல., இயந்திரத்தின் கட்டளையை எடுத்து செல்லும் ஒரு அமைப்பே நரம்புகள் ஆகும்.

இந்த நரம்புகளில் இருக்கும் மயலின் வேதிப்பொருளின் காரணமாக பல இலட்சக்கணக்கான நரம்புகள் சேர்ந்து தசைக்குள் சென்று மூளைக்கு கட்டளையை சேர்க்கிறது. இந்த கட்டளைகள் சரியான நேரத்தில் சென்றடையாமல் இருக்காதே நரம்பு தளர்ச்சி ஆகும்.

பெரும்பாலும் சர்க்கரை நோய் உள்ள நபர்களுக்கு பாதங்களின் விரல்கள் சில நேரத்தில் உணர்ச்சியற்று இருக்கும்., தாம்பத்தியத்தில் ஈடுபாடு இருப்பது தளர்ந்து., கைகளின் நடுக்கம் மற்றும் உடல் சோர்வு போன்றவை ஏற்படும்.

உண்மையில் ஆண்களுக்கு பெரும்பாலும் கை நடுங்கினால் நமது நண்பர்கள் நம்மை சில விஷயத்தை மேற்கோளிட்டு கலாய்ப்பது வழக்கம். சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் இதனால் அவர்களின் நட்பை விட்டு விலகிய சம்பவங்களும் அரங்கேறியிருக்கும். ஆண்களுக்கு உள்ள கை பழக்கத்தால் நரம்பு தளர்ச்சி ஏற்படுமா? என்ற கேள்விக்கு ஏற்படாது என்பது தான் உண்மையான பதிலே., இதனால் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

தனி ஒரு மனிதரின் மனநிலை மற்றும் சூழ்நிலை போன்று அதிக நாட்டத்தின் காரணமாக சுய பழக்கத்தை வைத்திருப்பவர்களுக்கு நரம்பு தளர்ச்சியானது ஏற்படாது. பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு கை நடுங்குதல் மற்றும் பதற்றத்திற்கு புரோட்டின் மற்றும் வைட்டமின் உணவுகளை சரிவர எடுத்து கொள்ளாததே காரணமாகும்.

இதுமட்டுமல்லாது துரித உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகளை அதிகளவில் எடுத்து கொள்ளுதல்., இன்றுள்ள பலருக்கு இருக்கும் பிரச்சனையாக தூக்கமின்மை மற்றும் உடற்சோர்வு போன்ற காரணங்களும் உள்ளது. இதனை குறைப்பதற்கு அடிக்கடி மீன் சாப்பிடுதல்., சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுதல்., கீரை வகை உணவுகள் மற்றும் முளை கட்டிய தானியங்களை சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி பிரச்சனை நீங்கும்.