நடிகர் விஷால் பற்றி பெண் ஒருவர் கூறியிருந்த புகார் சர்ச்சை ஏற்படுத்தியது. அந்த பெண் தன் பக்கத்துக்கு வீட்டில் உள்ளவரிடம் ஏற்பட்ட தகராறால் அந்த வீட்டில் பள்ளி செல்லும் பெண் பற்றி ஆபாசமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பள்ளி செல்லும் சிறுமியை நடிகர் விஷாலுடன் தொடர்புபடுத்தி மிக ஆபாசமான படங்களையும், கருத்துக்களையும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் அவர்.
அந்த சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தலைமறைவாக இருந்த பெண்ணை தற்போது போலீசார் திருச்சங்கோட்டில் கைது செய்துள்ளனர்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.