கனடாவில் வசிக்கும் நடிகை ரம்பாவை சமீபத்தில் சென்று பார்த்த பிரபலம்..

கனடாவில் வசிக்கும் நடிகை ரம்பாவை சந்தித்து விட்டு வந்துள்ள நடன இயக்குனர் கலா அவருடனான தனது நெகிழ்ச்சியான உறவுமுறை குறித்து பகிர்ந்துள்ளார்.

இலங்கை தமிழரான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ரம்பா கனடாவில் வசித்து வருகிறார்.

தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ரம்பாவும், பிரபல நடன இயக்குநர் கலாவும், நடிகை ரம்பாவும் நெருங்கிய தோழிகள்.

கலா சமீபத்தில் கனடாவுக்கு சென்ற நிலையில் அங்கு ரம்பா குடும்பத்தை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டதோடு ரம்பா குறித்து பேசியுள்ளார்.

கலா கூறுகையில், ரம்பா நடித்த பல திரைப்படங்களில் நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம்.

நான் எப்போதும் கனடாவுக்கு சென்றாலும் அவரை சந்தித்து விடுவேன்.

அவர் சென்னைக்கு எப்போதும் வந்தாலும் என்னை சந்திக்காமல் இருந்ததில்லை.

ரம்பா மூன்றாவது முறையா கர்ப்பமானதும் என்னிடம் அது குறித்து சொன்னார் .நீங்கள் எப்போதும் கனடா வருகிறீர்கள் என கேட்டார். நான் கனடாவில் இருக்கும் நாளில் வளைகாப்புக்கு ஏற்பாடு செய்தார்கள்.

நானும் சென்னையிலிருந்து வளையல் உள்ளிட்ட பரிசுப் பொருள்களை கொண்டு போனேன்.

வளைகாப்பின்போது இன்ப அதிர்ச்சியாக என் நண்பர்களை நடனமாட வைத்ததோடு, நானும் ஆடினேன்.

தாய் ஸ்தானத்தில் இருந்து ரம்பாவுக்கு வளைகாப்பை நடத்தினேன். நான் சொன்னது போல ரம்பாவுக்கு மூணாவதா ஆண் குழந்தைப் பிறந்தான்.

கனடாவில் என் நடன வகுப்பு செயல்படுவதால் அதை கவனிக்க அவ்வப்போது கனடாவுக்குப் செல்வேன்.

அப்படி தான் சமீபத்திலும் கனடா போயிருந்தேன். இரு குடும்பத்தினரும் நிறைய இடங்களுக்குச் சுத்திப்பார்க்கப் போனோம். ரம்பாவின் கணவர் இந்திரன் மனைவியையும் குழந்தைகளையும் சிறப்பாக கவனித்து கொள்கிறார் என கூறியுள்ளார்.