சென்னை ரசிகர்கள் ஏன் பாகிஸ்தானை ஆதரிக்கின்றனர்..

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து, வேல்ஸில் நடைபெற்று வரும் நிலையில், சென்னை ரசிகர்கள் ஏன் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு அளிக்கின்றனர் என்ற கேள்விக்கு சிஎஸ்கே தனது ட்வீட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளது.

உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில், தங்களது அணிக்கு ஆதரவாகவும், வீரர்களை உற்சாகம் மற்றும் ஊக்கப்படுத்தவும் அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்தில் குவிவது வழக்கம் தான்.

இந்நிலையில், நேற்று அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் வஹாப் ஆட்டமிழந்த போது, மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெர்சி அணிந்திருந்த நபர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதை ட்வீட்டரில் சுட்டிக்காட்டிய இந்திய ரசிகர் ஒருவர், உலகக் கோப்பையில் சென்னை ரசிகர்கள் ஏன் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு அளிக்கின்றனர் என எனக்கு புரியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தின மூலம் பதிலளித்துள்ளது. அதில், மைதானத்தில் இருந்தவர்கள் பாகிஸ்தானில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களாக இருக்கலாம் என பதிலளித்துள்ளது.