பிலிப்பைன்சில் 12 குழந்தைகளின் தந்தையாகிய ஒரு நபர் வேறொரு பெண்ணுடன் கையும் களவுமாக சிக்க, அவரை மனைவி அவரை துவம்சம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பேருந்து ஓட்டுநராக பணி புரியும் அந்த நபர், திருமணமாகி 12 குழந்தைகள் இருந்தும், வேறொரு பெண்ணுடன் தொடர்பிலிருந்திருக்கிறார்.
இது தெரிய வந்த அந்த மனைவி, கணவர் பேருந்து ஓட்டும்போதே அவரிடம் வந்து சண்டை போடுவதை அந்த பேருந்திலிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த பெண், உன்னுடன் 12 குழந்தைகள் பெற்றிருக்கிறேன், நீ ஒரு பெண்ணுக்காக எப்படி நமது கும்பத்தை நாசமாக்கலாம் என்று கேட்டு அவரை சட்டையைப் பிடித்து இழுத்து அடித்து உதைக்கிறார்.
அதே பேருந்தின் அவரது புது காதலியும் பயணிக்க, சக பயணிகள் இந்த சண்டையால் தங்கள் நேரம் வீணாவதை அறிந்து, அந்த காதலியை பேருந்தை விட்டு இறங்கச் சொல்கிறார்கள்.
அந்த பெண்ணும் தனது பொருட்களை எடுத்துக் கொண்டு பேருந்தின் பின் பக்க கதவைத் திறந்து தப்பியோடுகிறார்.
இதற்கிடையில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் செல்ல, அவர்கள் வந்து பயணிகளை வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி விட்டு, தம்பதிகளின் சண்டையை தீர்த்து வைத்ததாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.