சிங்கப்பூரில் குடிபோதையில் பொது இடத்தில் மிக மோசமாக நடந்து கொண்ட தமிழரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சிங்கப்பூரில் மத்திய பிராந்தியத்தில் உள்ள எவர்ஸ்டோன் நகரில் வசித்து வருபவர் முருகேசன் ரகுபதி ராஜா (25).
தமிழரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நகரில் உள்ள ஒரு பூங்காவுக்கு சென்றார்.
மதுபோதையில் இருந்த முருகேசன் ரகுபதி ராஜா, அங்கிருந்தவர்களுக்கு தொந்தரவு அளித்ததோடு மர இருக்கைகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினார்.
இதுபற்றி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் முருகேசன் ரகுபதி ராஜாவிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் ஒரு பொலிஸ் அதிகாரியின் முகத்தில் எச்சில் துப்பியதோடு, அவரது இரு கன்னத்திலும் மாறி, மாறி அறைந்தார். இதையடுத்து பொலிசார் மின்சார துப்பாக்கியால் சுட்டு, மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஏற்கனவே, ஒருவரது முகத்தில் மிளகாய்பொடியை தூவி பணத்தை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தவர் என்பது தெரியவந்தது.
அவர் அடுத்த மாதம் 9-ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் முருகேசனுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் கிடைக்கும் என கூறப்படுகிறது.