அமெரிக்காவில் மகளை மாற்றாந் தந்தை 9 குழந்தைகளுக்கு தாயாக்கி 20 வருடங்களாக கொடுமைப்படுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹென்ரி மிச்சில் (63) என்பவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.
அப்பெண்ணுக்கு ஹென்ரி இரண்டாம் கணவராவார். அவருக்கு ரோசலின் மெக்கினிஸ் என்ற பெண் பிள்ளை இருந்தாள்.
இந்நிலையில் ரோசலினிடம் மாற்றாந் தந்தையான ஹென்ரி கடந்த 1997ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தவறாக நடக்க முயன்றார்.
இதன் பின்னர் ஹென்ரியை அவர் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து 11 வயது சிறுமியான ரோசலினை ஹென்ரி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பின்னர் மகளை திருமணம் செய்ததால் தனக்கு பிரச்சனை வரும் என கருதி ரோசலின் தலைமுடியை வெட்டி விட்டு அவளை ஆண் போல மாற்றியுள்ளார் ஹென்ரி.
இந்த காலக்கட்டத்தில் ரோசலினை ஹென்ரி பல முறை துஷ்பிரயோகம் செய்ததன் விளைவாக தனது 15வது வயதில் அவள் குழந்தை பெற்றாள்.
பின்னர் பலமுறை கர்ப்பமாகி 9 குழந்தைகளை பெற்றெடுத்தார்.
இதோடு ரோசலினை சொல்ல முடியாத அளவுக்கு ஹென்ரி அடித்து உதைத்து 20 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வந்தார்.
கடந்த 2017-ல் தான் ஹென்ரியின் கோர முகம் வெளியில் தெரிந்தது.
அதாவது ரோசலின் ஒரு தம்பதியை சந்தித்த போது தனக்கு நேர்ந்த அனைத்து விடயங்களையும் கண்ணீர் மல்க கூறினார்.
இதன் பின்னரே இது தொடர்பாக பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டு ஹென்ரி கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கான முடிவும் தருவாயில் உள்ள நிலையில் ஹென்றிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.