விவசாயிகளின் கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கான முழுத் தொகையையும் ஒரே நிலுவையில் செலுத்தப்போவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
முன்பு நான்கு தவணைகளில் விவசாய கடன்களை செலுத்த உள்ளதாக கர்நாடக அரசு அறிவித்திருந்தது. இதுவரை பல வங்கிகளில் விவசாயிகளின் பெயரில் உள்ள கடன்களின் தொகை 8,550 கோடி ஆகும்.
இது வரை கர்நாடக அரசு 3,930 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ததில் 7,00,000 பேருக்கு அதிகமான விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பால் மேலும் 4,660 கோடி ரூபாய் வங்கிகளுக்கு அரசு செலுத்தி உள்ளது. இதுவரை கூட்டுறவு வங்கி கடன்களை 8,759 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 15 லட்சம் விவசாயிகளின் கடன்கள் அடைக்கப்பட்டுள்ளது.