கரையாம்புத்தூர் அருகே மணமேடு கிராமத்தை சேர்ந்த வைத்திலிங்கம்(53) என்பவர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் டிராக்டர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு மணிகண்டன் என்ற 25 வயது கொண்ட மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் முடித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றார்.
இந்நிலையில் அவரை சென்னையில் உள்ள கம்பெனிக்கு இடமாற்றம் செய்துள்ளனர். அதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பதனால் அவர் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அவர் ஊருக்கு வந்துள்ளார். அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். வைத்திலிங்கம் மகனை காணவில்லை என தேடி வந்தபொழுது அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் போலீசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் எதற்காக மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என விசாரித்து வருகின்றனர்.