ரஞ்சித் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை இயக்கிய ரஞ்சித் அரசியல் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். இந்நிலையில், பா. ரஞ்சித் ராஜராஜசோழன் குறித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். ராஜராஜசோழன் தங்கள் சமூகத்தின் நிலத்தை அபகரித்து விட்டதாக கூறினார்.

இந்த பேச்சுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் பலரும் ட்விட்டரில் ரஞ்சித்தை கலாய்த்து வருகின்றனர். #PrayForMentalRanjith என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினர். இது இந்திய அளவில் டிரெண்டானது.

இவ்வாறு, ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இன்று அந்த மனு குறித்து விசாரணை நடத்த பட்டது.

இதுகுறித்து இயக்குநர் பா.ரஞ்சித்தை வரும் 19 ஆம் தேதி வரை கைது செய்ய தடை நீடிப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் பதிலளிக்கவும் ஆணை பிறப்பித்துள்ளனர். பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க தமிழக அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.