உறக்கத்தில் இருந்த பெண் மருத்துவரை பலாத்காரம் செய்ய வந்த காம கொடூரன்.!

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அவர்களுக்கு பெரும் துயராக இருக்கும் நிலையில்., வெளியில் பணிக்கு மற்றும் பள்ளி – கல்லூரிகளுக்கு சென்று வரும் நேரத்தில் கூட பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். காம எண்ணத்தை கொண்ட கொடிய நபர்களால் தொடர் அநீதிகள் இழைக்கப்பட்டு வருவது பெரும் அதிர்வலையை நம்மிடையே ஏற்படுத்துகிறது.

தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் பெண் ஒருவர்., நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருந்தார். பின்னர் பணி நேர இடைவெளியின் போது அங்குள்ள மருத்துவர்கள் அறையில் ஓய்வெடுக்க சென்று உறங்கிக்கொண்டு இருந்தார்.

அந்த சமயத்தில்., மருத்துவமனைக்கு வருகை தந்த வாலிபர் ஒருவர்., நோயாளியை போல வருகை தந்து., மருத்துவர் உறங்கிக்கொண்டு இருந்த அறைக்குள் அதிரடியாக விரைந்து., மருத்துவரை பலாத்காரம் செய்யும் நோக்கில் செயல்பட்டு., அவருக்கு முத்தங்களை வழங்கியுள்ளார். தனக்கு நடக்கும் அநீதியை தூக்கத்தில் இருந்து விழித்த மருத்துவர் உணர்ந்து கொள்ளவே., அவருடன் கடுமையான போராட்டத்தை நடத்தியுள்ளார்.

இதனையடுத்து காம கொடூரனின் நாக்கை கடித்து மருத்துவர் துப்பியுள்ளார். இதனால் ஏற்பட்ட வலியால் அலறித்துடித்த காம கொடூரன்., சம்பவ இடத்தில் இருந்து தப்பியோட முயற்சிக்கவே., அங்கிருந்த நபர்களின் உதவியுடன் கொடூரனை கைப்பற்றி., காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்த காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.