கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹவின் சதித் திட்டங்கள் மெல்லமெல்ல வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அவரைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னர், நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், விசாரணைகளையும் முப்படையினரும் முடுக்கிவிட்டிருந்தனர்.
இவ்விசாரணைகளின்போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் இன, மதவாதப் போக்கோடு செயற்பட்டது மட்டுமல்லாது, நாட்டில் வன்முறைகளை ஏற்படுத்தும் குழுக்களுக்கு ஆதரவாக செயற்பட்டதும் கண்டறியப்பட்டது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், தொடர்பில் வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களினால் அவரைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்தால் இரத்த ஆறு ஓடும் ஒன்று பகிரங்கமாக இனவாதத்தை விதைத்தவர் தான் இந்தக் ஹிஸ்புல்லா.
தமிழ் தலைமைகள் இது தொடர்பில் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டி இனவாதத்தை விதைக்கிறார் என்று விமர்சித்தார்.
அதேபோன்று, முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவார்கள் என்றும் பகிரங்கமாக எச்சரித்தார்.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் அடிப்படைவாதிகளாகச் செயற்பட்டவர்களோடு தொடர்புகளை வைத்திருந்தமை குறித்து முன்னர் தகவல்கள் கசிந்திருந்தாலும், இப்போது அவை ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
முன்னதாக தான் 2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் சஹ்ரான் குழுவினருடன் தொடர்பில் இருந்ததாகவும், எனினும் அப்போது அவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்றும், அதன்பின்னர் தான் தீவிரவாதிகளாக மாறினார்கள் என்றும் தற்போது முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் கதையை விடுகிறார்.
உண்மையில், அன்றியிலிருந்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படும் வரை ஹிஸ்புல்லாஹ் தொடர்ச்சியாக அடிப்படை வாதிகளோடு தன்னுடைய நெருங்கி தொடர்பினை பேணிவந்திருக்கிறார் என்பதை பல ஆதாரங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையான ஹிஸ்புல்லாஹ், தான் சஹ்ரானுடன் தொடர்பில் இருந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும் அவர்கள் தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
இது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அதேபோன்று, நாங்கள் இந்த நாட்டில் மட்டும் தான் சிறுபான்மையினர், உலகத்தில் பெரும்பான்மையினத்தினர் என்று குறிப்பிட்டு பெரும் சர்ச்சையையும் இனவாதத்தை மக்களிடையே விதைத்திருக்கிறார் ஹிஸ்புல்லாஹ். இதனால் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் மக்களம் கொதிப்படைந்திருக்கிறார்கள்.
இது தொடர்பில் அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட்டும் இருக்கிறார்கள்.
ஒருபுறம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் இனவிரிசலை தடுப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவுக் ஹக்கீம் போன்ற முக்கியமான தலைவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் ஹிஸ்புல்லாவின் இதுபோன்ற நடவடிக்கைகள் இலங்கையை இனவாதத்தில் சிக்க வைத்து நாட்டில் இன மதக் கலவரத்தை உண்டு பண்ணும் செயற்பாடுகளை செய்கிறார்.
இந்நிலையில், ஹிஸ்புல்லாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நெருங்கிக் கொண்டிருக்கையில், அவரைக் கைது செய்து சிறையில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படுகின்றமையினால் அவர் இன்னும் ஒரு சில நாட்களில் கைது செய்யப்படுவார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தன்னைக் கைது செய்வதற்கு முன்னர் காத்தான்குடியில் கலவரத்தை ஏற்படுத்தி அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், நாட்டில் பயபீதியை ஏற்படுத்துவதற்காகவும் ஹிஸ்புல்லாஹ் பெரும் முயற்சிகளை எடுப்பதாக இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் லசந்த கலப்பதி அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் உரியமுறையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை, இதுபோன்ற அரசியல்வாதிகளின் இனவாதக் கருத்துக்களை நம்பி சாதாரண இளைஞர்களும், மாணவர்களும் எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்று அப் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.