குடும்பத்தை பாதுகாக்க வேண்டுமாயின் பதவி விலகுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரொசன் ரணசிங்க நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றம் சுமத்தியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி உரிய முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என அவர் கூறியிருந்தார்.
அத்துடன் ஜனாதிபதியின் செயற்பாடுகளினால் சூழ்ச்சித் திட்டம் மூலம் ரணில் அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய சாத்தியம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ரணில் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினரே ஜனாதிபதி மீது அதிக குரோதத்தில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை கைப்பற்றினால் ஜனாதிபதியின் முழுக் குடும்பத்தையும் அழித்து விடுவார்கள் எனவும் அவர் இதன்போது எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.