இந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைப்பதை தமிழ் மக்கள் விரும்பாவிட்டால் அதற்காக நீதிமன்றமோ, பொலிஸ் நிலையமோ செல்லவேண்டியதில்லை புத்தர் சிலையை நாங்களே அகற்றுவோம். என அத்துரலிய ரத்தின தேரர் கூறியுள்ளார்.
இந்து பௌத்த கலாசார பேரவையில் 2ம் மொழி கல்வியை நிறைவு செய்த மாணவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது மேலும் அவர் கூறுகையில்,
யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவா்களுக்கு சிங்களம் கற்பிக்கப்படுகிறது. அதேபோல் கொழும்பில் சிங்கள மாணவா்களுக்கு தமிழ் கற்பிக்கப்படவேண்டும். அதற்கான பொறுப்பு இந்த பேரவைக்கு உள்ளது. மேலும் இந்து சமயத்திற்கும் பௌத்த சமயத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இங்கே இந்து ஆலயங்களில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவிக்கப்படுகின்றது.
உண்மையில் அதனை மக்கள் விரும்பாவிட்டால் அதனை நாங்கள் செய்யமாட்டோம். அதற்காக நீதிமன்றம் செல்ல தேவையில்லை, பொலிஸ் நிலையம் செல்ல தேவையில்லை. இந்து பௌத்த சமயங்களின் செய்தி அன்பு மட்டுமேயாகும். தலதா மாளிகை தாக்கப்பட்டபோது இந்து கோவில்களை பௌத்தர்கள் தாக்கவில்லை. 83 கலவரம் நடைபெற்ற காலத்திலும் கூட இந்து கோவில்களை தாக்கவில்லை. தாக்கவேண்டும் என நாங்கள் நினைக்கவுமில்லை.
ஆனால் சவுதி, ஓமான், கட்டாா் போன்ற நாடுகளில் பிள்ளையாா் கோவிலை கட்ட முடியுமா? இலங்கையில் சகல மதங்களுக்கும் பூரணமான சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது. உயிா்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள், விடுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பலா் உயிாிழந்தனா் இதனை இஸ்லாமிய இனவாதிகளே இதனை செய்தாா்கள். இதனை சொல்வதற்கு அச்சப்படவேண்டியதில்லை.
கிழக்கு மாகாணத்தில் அரபு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் 2016ம் ஆண்டளவில் உருவாக்கப்பட்டபோது அது தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என குறிப்பிடப்பட்டது. ஆனால் ஆளுநா் ஹிஷ்புல்லா அரபு நாடுகளில் உள்ளதுபோல் கட்டியுள்ளாா். இதற்கு நிதி யாா் கொடுத்தாா்கள் என பாா்த்தால் 100 மில்லியனுக்கு மேல் சவுதியில் உள்ள மக்களிடமிருந்து பணத்தை பெற்று தனிப்பட்ட பல்கலைக்கழகமாக இயக்கிக் கொண்டிருக்கின்றாா்.
இனவாதத்தை உருவாக்கவேண்டும் அல்லது தேவையற்ற விடயங்களை கற்பிப்பதற்கான பல்கலைக்கழகமாகவே இது இருக்கின்றது. இவ்வாறான பல்கலைக்கழகத்திற்கு இந்துக்களும், பௌத்தர்களும் இடமளிக்ககூடாது.
தனிப்பட்ட ரீதியில் இயங்கிவரும் பல்கலைக்கழகத்தை மாற்ற முடியாவிட்டாலும் அரசுடமையாக மாற்றி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றப்படும். அதற்கான செயற்பாடுகளை நாங்கள் தொடா்ந்தும் எடுப்போம். மேலும் குருநாகல் வைத்தியசாலையில் சில முறைகேடான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளது. பிள்ளைகளை பெற்றுக் கொள்ள முடியாதவாறு கருத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சென்றபோதும் அநேக தமிழ் தாய்மாா்கள் இவ்வாறான முறைப்பாட்டை கூறியள்ளாா்கள். ஒரு பிள்ளை பெற்ற பின்னா் பிள்ளை பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் அனேகமான பாடசாலைகளில் தமிழ் இனத்தவா்களை ஆசிாியா்களாக காண முடியவில்லை.
விஞ்ஞான, கணிதபாட அசிரியா்களாக 100ற்கு 80 வீதமானவா்கள் முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கு கல்வி அமைச்சு என்ன செய்துள்ளது. இவ்வாறு கிழக்கில பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. பல நுாற்றுக்கணக்கான காணிகளை அபகாித்துள்ளாா்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறான விடயங்களில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.
ஏற்றுமதி, இறக்குமதியில் முஸ்லிம்கள் அதிகமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாா்கள். இப்ராஹாம் என்பவா் பஞ்சு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாா் இவ்வாறானவா்கள் ஊடாக தமிழ் மக்கள் சூறையாடப்பட்டாா்கள், சிங்கள மக்கள் சூறையாடப்பட்டாா்கள். தமிழ் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து இஸ்லாமிய இனவாதத்தை அழிக்கவேண்டும்.
இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கு இடையில் பலமான அமைப்பை உருவாக்கவேண்டும். தமிழ் தரப்புக்கு எதிா்கட்சி அந்தஸ்த்து கொடுத்தபோதும் அவா்கள் வடக்கில் பிரச்சினை என்றாா்களே தவிர அவா்கள் தீா்வினை கொடுத்ததில்லை.
பல நுற்றுக்கணக்கான தமிழா்கள் இஸ்லாமியா்களை திருமணம் செய்துள்ளனா். அமைச்சுக்களில் நுழைந்துள்ளாா்கள், கிழக்கு மாகாணத்தை அவா்கள் நிா்மானிக்கிறாா்கள்.
இதனை எவரும் கண்டு கொள்வதில்லை. சிங்களவா்களும், தமிழா்களும் நினைத்தால் சகல தகுதிகளையும் நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும். ஹிஸ்புல்லாஹ், அசாத்சாலி போன்றவா்களை அடுத்த தோ்தலில் தோற்கடிகக்வேண்டும் என்றாா்.