உலகக்கிண்ணம் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக மைதானம் தயார் செய்யப்பட்டு வருகிறது என அணியின் மேலாளர் அஷாந்தா டி மெல் ஐசிசிக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக்கிண்ணம் தொடரில் இலங்கை அணி 4 போட்டிகளில், ஒரு போட்டியில் வெற்றியும் மற்றொரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.
இதில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மழை பெய்ததால், ஒரு பந்துகூட வீசாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இன்று நடைபெறும் 5 வது போட்டியில் அவுஸ்திரேலிய அணியை லண்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை அணி எதிர்கொள்ள உள்ளது.
இதற்கிடையில் அணியின் மேலாளர் அஷாந்தா டி மெல, “இங்கிலாந்தில் பயிற்சி வசதிகள் மற்றும் தங்குமிடங்கள் இலங்கை அணிக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் அமையவில்லை” என ஐசிசிக்கு புகார் அளித்துள்ளார்.
“கார்டிஃப் மற்றும் பிரிஸ்டல்” ஆகிய இடங்களில் நாங்கள் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் பச்சை நிறத்தில் மைதானத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
சனிக்கிழமை அவுஸ்திரேலிய அணிக்கெதிராக ஓவலில் நடைபெற இருக்கும் போட்டியையும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான முறையிலே மைதானத்தை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
நாங்கள் விளையாடிய அதே மைதானத்தில் மற்ற அணிகள் விளையாடினால், ரன்கள் அதிகம் குவிக்கும் விதத்தில் மைதானங்கள் தயார் செய்யப்படுகின்றன என புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதில் தெரிவித்துள்ள ஐசிசி, இலங்கை அணியிடம் இருந்து பெறப்பட்ட புகார் கடிதம் நியாயமற்ற முறையில் இருப்பதால் அதனை தள்ளுபடி செய்திருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும், ஐசிசி அனைத்து அணிகளையும் ஒரே மாதிரியான முறையில் தான் நடத்துகிறது எனவும் விளக்கம் கொடுத்துள்ளனர்.