புகார் அளித்த ஆசிரியைக்கு காவல் நிலையத்தின் முன்னரே அரங்கேறிய பெருங்கொடூரம்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்திற்கு அருகில் உள்ள பொன்னம்பேட்டை காவல் நிலையத்திற்கு முன்பு ஆசிரியை ஒருவரை சுட்டுக் கொன்று., தொழிலதிபர் ஒருவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறியதாவது., கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டம் விஜயராம் பேட்டை தாலுக்கா மலை கிராமத்தை சார்ந்தவர் ஆஷா காவிரியம்மா (வயது 50).

இவர் அங்குள்ள பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் நிலையில்., தினமும் பள்ளிக்கு வாகனத்தில் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த சமயத்தில் கடைக்கு செல்வதற்காக கிளம்பிய நிலையில்., அங்கு உள்ள புறக்காவல் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வாகனத்துடன் காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக மாணவர்களும் பயணிகளும் இருந்தனர். அந்த சமயத்தில்., அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென ஆஷாவை நோக்கிய ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனையடுத்து ஆஷா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு மாணவர்களும் காயமடைந்த நிலையில்., காவல் நிலையத்திற்கு முன்பே இந்த சம்பவம் அரங்கேறியது. துப்பாக்கி சத்தத்தை கேட்டு பதற்றமடைந்த காவல் துறையினர் வெளியே என்ன நடக்கிறது என்று விரைவாக வந்து பார்த்தனர். அந்த சமயத்தில்., துப்பாக்கியால் சுட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்று அங்குள்ள காபி தோட்டத்தில் தஞ்சம் அடைந்ததுள்ளதை கவனித்துள்ளனர்.

இந்த நிலையில்., சிறிது நேரத்தில் அங்கிருந்தும் துப்பாக்கி சத்தம் கேட்டது. பின்னர் உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில்., காபி தோட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்திய சமயத்தில் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து இருவரின் உடலையும் கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து நிலையில்., காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த விசாரணையில் ஈடுபட்ட காவல் துறையினர்., தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஆஷா., விராஜ்பேட்டை அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் ஜெகதீஷ் (வயது 60) என்பதும்., ஜெகதீஷ் காபி தோட்டம் வைத்து நடத்தி வரும் நிலையில்., வட்டி தொழில் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இது மட்டுமல்லாது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஆஷா – ஜெகதீஷிடம் கடன் வாங்கிய நிலையில்., அவர் பணத்தை கால தாமதமாக வழங்கி வந்துள்ளார்.

இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில்., ஜெகதீசன் மனைவி இறந்து விட்ட காரணத்தால் கணவரை இழந்து வாழ்ந்து வரும் ஆஷாவை திருமணம் செய்ய ஜெகதீஷ் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதுமட்டுமல்லாது தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆஷா காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., கடந்த 3 நாட்களாக சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நிலையில்., காவல் நிலையத்தில் புகார் அளித்து சிறையில் தள்ளியதால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ் இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.

இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அவர்கள் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இது குறித்த தகவல் அறிந்த மகள்கள் கதறியழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.