ஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள்!

நாவலப்பிட்டி – கடுலஞ்சேன தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் வைத்து தங்க மாலையொன்றை அறுத்த சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆலய கும்பாபிஷேகம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆலயத்திற்குள் நுழைந்த ஆறு சந்தேகத்திற்கிடமான பெண்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதை போல் பாவனை செய்து பெண்ணொருவரின் தங்க மாலையை அறுத்துள்ளனர்.

இதனையடுத்து தங்க மாலையை பறிகொடுத்த கூச்சலிட்ட நிலையில் ஆலயத்திற்குள் வந்த பொலிஸார் அறுக்கப்பட்ட தங்கமாலையை மீட்டுள்ளதுடன் இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பெண்களையும் கைது செய்து விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் கூறுகையில், சந்தேகநபர்களான ஆறு பெண்களும் ஆலயங்களில் இடம்பெருகின்ற விஷேட பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகங்கள் என்பவற்றுக்கு குழுவாக சென்று பக்தர்களின் தங்க நகைகளை கொள்ளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் வாழைச்சேனை, புத்தளம், ஆலாவத்த, வத்தேகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் 23 தொடக்கம் 28 வரையான வயதினை உடையவர்கள் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சந்கேதநபர்களை இன்றைய தினம் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.