கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா பகுதியில் உள்ள தோனகுண்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மயிலரப்பா. இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சரோஜா. இவர்கள் இருவருக்கும் கடந்த பதிமூன்று வருடங்களுக்கு முன்னதாக திருமணம் முடிந்த நிலையில்., இவர்களுக்கு குழந்தை இல்லை. அதன் காரணமாக அப்பகுதியை சார்ந்த வினோத் (வயது 25) என்ற இளைஞர் சரோஜாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மயிலரப்பா வீட்டில் இல்லாத சமயத்தில்., வீட்டிற்குள் நுழைந்து தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில்., தனது ஆசைக்கு இணங்கும்படி சரோஜாவை வற்புறுத்தி வந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த சரோஜா இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்து., இருவரும் வினோத்தை கண்டித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ளாத வினோத் தொடர்ந்து சரோஜாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில்., எல்லை மீறி செல்வதன் காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இவரது புகாரை காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை என்பது தெரியவருகிறது. இதன் காரணமாக கணவனும் மனைவியும் மனமுடைந்து காணப்பட்ட நிலையில்., தற்போது இருவரும் தற்கொலை முடிவு எடுத்துள்ளனர். தற்கொலைக்கு முன்பாக இவர்கள் இருவரும் வீடியோ ஒன்று பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையில்., வீடியோ பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவில் அவர்கள் பேசி இருப்பது., எங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 13 வருடங்கள் ஆகும் நிலையில்., எங்களுக்கு குழந்தை இல்லை.
எனது மனைவிக்கு இதே பகுதியில் வசித்துவரும் வினோத் என்ற வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து வரும் நிலையில்., இதுகுறித்து அவரிடம் பலமுறை எச்சரித்தும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த விதமான பலனும் இல்லை. வினோத்தின் குடும்பத்தினர் எங்களிடம் வந்து புகாரை வாபஸ் வேண்டும் என்றும்., புகாரை வாபஸ் பெற்றால் ரூ.5 இலட்சம் தருவதாகவும் கூறினார்கள். இதனை ஏற்று புகாரை வாபஸ் பெறாததால்., கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இதன் காரணமாக ஊர்களில் எங்கள் இருவரைப் பற்றியும் தவறாக பேசி வந்தனர்.
இதனால் ஏற்பட்ட மனக்கஷ்டத்தில்., எங்களுக்கு ஆதரவாக யாரும் இல்லை என்ற காரணத்தால் தற்கொலை முடிவு எடுத்துக் கொள்கிறோம். எங்களின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்., அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவேண்டும்., அவர்களை மன்னிக்க கூடாது என்று கூறியுள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு பொதுவான மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து இதனை கண்ட உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடையவே., சரோஜா உயிருக்கு போராடி கொண்டு இருப்பதை கண்டுள்ளனர். உடனடியாக அவரை மீட்ட காவல் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., உயிரிழந்த மயிலரப்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அறிந்த வினோத் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில்., இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வினோத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.