மருத்துவரின் உரிமத்தை ரத்து செய்த நிர்வாகம்!

பேஸ்புக்கில் உள்ளாடைகளுடன் புகைப்படங்களை பதிவேற்றிவந்த மியான்மார் நாட்டின் பெண் மருத்துவரது உரிமத்தை மருத்துவ நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

Nang Mwe San என்ற மருத்துவரின் உரிமத்தையே அங்குள்ள மருத்துவ நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

பொது மருத்துவரான Nang Mwe San கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் மொடல் துறையில் களமிறங்கியுள்ளார்.

இதனையடுத்து நவ நாகரிக உடை அணிந்து அதிக புகைப்படங்கள் பதிவு செய்து விளம்பரப்படுத்தியுள்ளார்.

ஆனால் இது மியான்மரின் கலாச்சாரத்திற்கு உஅகந்தது அல்ல என கூறி மருத்துவ நிர்வாகம் கண்டித்துள்ளது.

மட்டுமின்றி, மருத்துவர் Nang Mwe San தொடர்ச்சியாக ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் பக்கத்தில் பதிவேற்றி வருவதாகவும்,

இது கலாச்சார சீர்கேடு எனவும் கூறி பலமுறை மருத்துவ நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஆனால் இதை அவர் கண்டுகொள்ளவே இல்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்தே மருத்துவ நிர்வாகம் அவரது மருத்துவர்களுக்கான உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆனால் மருத்துவ நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக தாம் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும்,

அலுவலக நேரத்தில் அல்ல அது போன்ற நாகரிக உடைகளை அணிவது என்றும், தனிப்பட்ட உரிமையில் அவர்கள் தலையிடுவது சட்டத்திற்கு புறம்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.