ரத்த ஆறு ஓடும்: வெளிநாட்டவர் விடுத்த மிரட்டல்!

சுவிட்சர்லாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஈராக் அகதி ஒருவர், தம்மை மீண்டும் அனுமதிக்க மறுத்தால் ரத்த ஆறு ஓடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் குடியிருந்து வருபவர் 31 வயதான ஈராக் நாட்டவர்.

தன்பால் ஈர்ப்பு கொண்ட இவர் குற்றச்செயலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார்.

மட்டுமின்றி, இத்தாலியில் இருந்து இவர் சுவிஸ் நாட்டுக்கு குடியேறியதால் இவரை இத்தாலிக்கே சுவிஸ் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

விசாரணை காலகட்டத்தில் சுவிஸ் பொலிசார் குறித்த நபரிடம் இருந்து பணம் மோசடி செய்ததாகவும், எள்ளி நகையாடியதாகவும், அது அந்த நபரை உளவியல் ரீதியாக பாதித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாஸல் பொலிசாரை பழிவாங்காமல் விடுவதில்லை எனவும், துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் பாஸல் நோக்கி ரயிலில் தாம் வர இருப்பதாகவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆனால், பின்னர் தமது மிரட்டலை கைவிட்டதாக கூறிய அவர், இதுவரை சுவிட்சர்லாந்துக்குள் நுழையவில்லை.

மட்டுமின்றி, தாம் சுவிட்சர்லாந்துக்கு எதிராக எந்த மிரட்டலும் விடுக்கவில்லை எனவும், தமது அரைகுறை ஜேர்மானிய மொழி காரணமாகவே தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என அவர் விளக்கமளித்துள்ளார்.

இதனிடையே மார்ச் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த அவரை கைது செய்த பொலிசார், தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.