மின்சார வாடிக்கையாளர் சேவையை மேலும் செயற்றிறன் மிக்கதாக மாற்றுவதற்கு புதிய மொமைல் எப் (App) ஒன்றை நாளைய தினத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
CEB Care எனும் பெயரில் இந்த மொபைல் அப் கெயார் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதனடிப்படையில் மின்வெட்டு, முறைப்பாடுகளை முன்வைத்தல், மின்கட்டணம் தொடர்பிலான சேவைகளை இந்த அப்பினூடாக நாளை முதல் வழங்கவுள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
வாடிக்கையாளர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளில் CEB Care அப்பை, பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு இலகுவானதும், சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.