13 மணிநேரத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனை!

ஐம்பது ஆண்டுகளாக சுவீடன் நாட்டில் நடைபெறும் vatterunden திறமைக்கு சவால் என்னும் சர்வதேசச்சிறப்பு ஓட்ட நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

சர்வதேசச்சிறப்பு ஓட்ட நிகழ்வின் விதிமுறையானது 24 மணிநேரத்துக்குள் ஓடி முடிப்பதேயாகும்.இந்நிலையில் குறித்த ஓட்ட நிகழ்வில் இருவர் 13 மணிநேரத்துக்குள்ளே ஓடி முடித்து சாதனையை தம்வசமாக்கியுள்ளனர்.


இப்போட்டியின் போது பத்து தரிப்பிடங்களில் ஓட்ட வீரர்களுக்கான முதலுதவி மற்றும் சிற்றுண்டி நிலையம் அமைக்கப்பட்டு வீரர்களுக்கான ஊக்கப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன். 25,000 க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டிகள் பங்கேற்றுள்ளதுடன்,நிகழ்வின் இறுதியில் பாராட்டுச்சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வு 14.06.19 இரவு எட்டு மணிக்கு ஆரம்பமாகிய ஓட்ட நிகழ்வு மறுநாள் காலை 15.06.19 உடன் நிறைவு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.