டொராண்டோ ராப்டர்ஸ் அணிவகுப்பின் போது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு கூடைப்பந்து ரசிகர்கள் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த NBA சாம்பியன்ஷிப் போட்டியில், முதன்முறையாக வெற்றி பெற்று டொராண்டோ ராப்டர்ஸ் அணி வரலாற்று சாதனை படைத்தது.
இதனை அந்த அணியின் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நாதன் பிலிப்ஸ் சதுக்கம் அருகே டொராண்டோ ராப்டர்ஸ் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ராப்டர்ஸ் பயிற்சியாளர் நிக் நர்ஸ் மற்றும் ஒளிபரப்பாளர் மாட் டெவ்லின் ஆகியோர் ரசிகர் கூட்டத்தில் பேசினர்.
அப்போது திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அங்கிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிதறி ஓடியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
இந்த துப்பாக்கி சூடானது அணிவகுப்பில் நடைபெற்றதா? அல்லது அதன் அருகாமையில் நடைபெற்றதா? என்பது குறித்து இன்னும் விளக்கப்படவில்லை.
இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.
Shots fired at Nathan Phillips Square. This is shot at the north side of city hall. pic.twitter.com/KhGb5xag02
— Francine Kopun (@KopunF) June 17, 2019