மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கையர்!

சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றையதினம் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 50 வயதான தவசீலன் சபாநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி இவர் காணாமல் போயிருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின்னர் இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மர்மமான உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இவரது மனைவி தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.