பெரும் பதற்றத்தில் கல்முனை போராட்டக்களம்; களத்தில் கருணா, வியாழேந்திரன்!

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் சர்வமதத் தலைவர்கள் முன்னெடுத்துவரும் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டக் களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மட்டக்களப்புக்குச் சென்று அங்கிருந்து போராட்டக்களத்திற்கு பேரணியாக நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிப்பவர்களின் உடல் நிலை மோசமடைந்திருப்பதால் வைத்தியர்கள் போராட்டக் களத்திற்க விரைந்து செல்வதாகவும் இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதரவு தெரிவக்கும் வகையில் கருணாவும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் இந்த போராட்ட களத்திற்கு பல அரசியல் பிரமுகர்களும் சென்றவண்ணமுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கல்முனையில் சர்வ மதத்தலைவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முற்போக்கு தமிழர்கள் அமைப்பினால் நேற்று முன்தினம் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஒரு இனம் இன்னுமொரு இனத்தின் உரிமையினை பறிக்கும் வகையிலான செயற்பாடுகள் கல்முனையில் முன்னெடுக்கப்படுவதாக இதன்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்தோடு, கல்முனை பிரதேச செயலகம் உடனடியாக தரமுயர்த்தப்படவேண்டும் என்றும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.