தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வை கொண்டு வந்த முதல்வர்.!

தற்பொழுது தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தண்ணீர் பஞ்சம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு, அவர் பதிலளித்தார் அதில், ” மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்து விட்டு வீராணம் ஏரி நிரம்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இவ்வாறு வீராணம் ஏரி நிரப்பப்பட்டால், சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு விரைவில் சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கடல் நீரை குடிநீராக்கும் பணிகளும் விரைவாகவே நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.