இந்திய அணியின் வீரர் அதிரடி விலகல்..!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி அபாரமாக வெற்றி பெற்று உள்ளது.

14 வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி அபாரமாக வென்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் 117 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நாதன் கோல்டன் நைல் வீசிய பந்து, தாவனின் இடது கையின் பெருவிரல் பலமாக தாக்கி.

உடனே பிசியோதெரபிஸ்ட் வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். இருந்தாலும் வலியுடன் விளையாடி தவான் சதம் அடித்து அசத்தினார். அந்த விரல் வீங்கியதால், அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக ஜடேஜா பீல்டிங் செய்தார். தவான் இரண்டு போட்டிகளில் விளையவில்லை.

இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷீகர் தவான் நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஓய்வெடுக்க தவானுக்கு மருத்துவர்கள் அறிவிருத்தி உள்ளதால் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கும் பதிலாக ரிஷாப் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளது.