கடந்த மே 23ம் தேதி மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் தனது ஆட்சியை நிலை நாட்டியது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
வேலூர் தொகுதியை தவிர்த்து மீதமுள்ள 37 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெற்றது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் தேனி தொகுதியில் தேர்வு பெற்றார்.
இந்நிலையில், நேற்று(19-06-19) பாராளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. சபாநாயகர் முன்னிலையில் வரிசையாக தமிழக எம்பிக்கள் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், ஆரவாரத்துடன் திமுக கனிமொழி தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினராக பதவியேற்றார். ஆனாலும் அவர் பதவியேற்பதற்கு முன்னதாக சில பரபரப்பு தகவல்கள் பரவியது.
2 ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து முன்னதாக கனிமொழி மற்றும் ஆ.ராசா மீது வழக்குகள் இருந்தது. இருப்பினும், சரியான ஆதாரங்கள் இல்லையென கூறி அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த வழக்கில் மீண்டும் மேல்முறையீடு செய்ய்யப்பட இருப்பதாகவும், இதன் காரணமாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், கனிமொழி எம்பி பதவி காலியாக வாய்ப்புள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும், கனிமொழியின் அரசியல் வாழ்விற்கே அது வைக்கப்படும் முற்றுப்புள்ளியாகக்கூடும் எனவும் தெரிவிக்கின்றனர்.