அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த தன்னுடைய கணவரின் விந்தணுக்களை வைத்து குழந்தை பெற்றுக்கொள்ள நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
பிரித்தானியாவை பூர்விகமாக கொண்ட ஜெனிபர் (35) மற்றும் டேனியல் காஃப்னி (38) என்கிற மருத்துவ தம்பதி அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளான்.
நவம்பர் 6, 2018 அன்று இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுவிட்டு, வீடு திரும்பிய சில மணி நேரங்களில், அவருடைய கணவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்கிற செய்தி வந்துள்ளது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெனிபர், அவர் இறந்த மறுநாளே விந்தணுக்களை எடுத்து பத்திரம் செய்து வைத்துவிட்டார்.
இந்த நிலையில் ஜெனிபர் பிரிஸ்பேன் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், நானும் என்னுடைய கணவரும் எங்கள் குடும்பத்தை விரிவுபடுத்துவது குறித்து, அவர் இறப்பதற்கு முன்பே திட்டமிட்டிருந்தோம்.
இறந்த கணவரின் விந்தணுக்களை பயன்படுத்துவதால் வரும் விளைவு பற்றி நான் நன்கு சிந்தித்து பார்த்துவிட்டேன்.
பிறக்கவிருக்கும் மற்றொரு குழந்தை எங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்பதை நான் நம்புகிறேன். தனி ஒரு ஆளாக அந்த குழந்தையை வளர்ப்பது சவாலானது என்பது எனக்கு தெரியும். ஆனால் அதனை நிர்வகிப்பதற்கான வலிமை மற்றும் சமூக ஆதரவு தனக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவானாது 21ம் திகதியன்று விசாரணைக்கு வர உள்ளது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 2016 இல் திடீரென இறந்த தனது காதலன் ஜோசுவா டேவிஸிடமிருந்து விந்தணுக்களை அறுவடை செய்ய அனுமதி கோரிய, 25 வயதான அய்லா கிரெஸ்வெல்லை இந்த வழக்கு நினைவூட்டுகிறது.
2018 ஜூன் மாதம் அன்று பிரிஸ்பேன் உச்ச நீதிமன்ற நீதிபதி சூ பிரவுன், க்ரெஸ்வெல் விந்தணுவை பயன்படுத்த அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.