இங்கிலாந்து அணியுடனான போட்டி இடம்பெறுவதற்கு முதல் நாள் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் இங்கிலாந்தின் ஹோட்டல் ஒன்றில் மோதலில் ஈடுபட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மான்செஸ்டரில் உள்ள அக்பர் உணவகத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் உணவருந்திக்கொண்டிருந்தவேளை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
தாங்கள் உணவுண்பதை நபர் ஒருவர் படம்பிடிப்பதை வீரர்கள் எதிர்த்தனர் எனவும் பின்னர் இது மோதலாக மாறியது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த உணவகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனினும் எவரும் கைதுசெய்யப்படவில்லை .
லீவர்பூல் வீதியில் கைகலப்பு இடம்பெறுவதாக அறிந்து தாங்கள் அப்பகுதிக்கு விரைந்ததாக தெரிவித்துள்ள காவல்துறையினர் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எவரும் கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ள ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் தொடர்ந்து இது குறித்து கேள்வி எழுப்பினால் செய்தியாளர் மாநாட்டிலிருந்து வெளியேறப்போவதாக எச்சரிக்கை செய்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.