ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் கலக்கடா பகுதியை சார்ந்தவர் உசேன். இவரது மனைவியின் பெயர் அம்மாஜி. இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்ற நிலையில்., இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த சமயத்தில்., அதே கிராமத்தை சார்ந்த சரச சிம்மாவோடு என்ற வாலிபருடன் அம்மாஜிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கமானது நாளடைவில் கள்ளகாதலாக மாறவே., உசேன் பணிக்கு செல்லும் நேரத்தில்., இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்., அடிக்கடி சிம்மாவோடு வீட்டிற்கு வருவதை நோட்டமிட்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து உசேனிடம் கூறியதை அடுத்து., இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை அடுத்து கள்ளக்காதல் தொடர்பானது தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த உசேன் கள்ளக்காதல் பழக்கத்தை கைவிட கூறி கூறிய நிலையில்., அம்மாஜி கள்ளக்காதல் தொடர்பை கைவிட மறுத்துள்ளார். இதனையடுத்து இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதமானது அதிகாரிகரிக்கவே., அம்மாஜியை கத்தியால் குத்திய சிம்மாவோடு., அவரது தலையை துண்டாக்கி அங்குள்ள காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று சரணடைந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் சிம்மாவோடுவிடம் விசாரணை மேற்கொண்டு., சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான விசாரணையிலும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.