தற்கொலைதாரிகள் ஏன் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெடிப்பை மேற்கொள்ளவில்லை என்றும் , அந்த சமயத்தில் அங்கு இருந்தவர்கள் யார் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பியிரு க்கிறார்.
நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்ட அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்த சமயத்தில் அங்கிருந்த புள்ளிகள் யாரென அறிந்துகொண்டால் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களையும் இலகுவில் அறியலாமென்றும் எல்லாவற்றையும் அறியும் ஊடகவியலாளர்கள் இதனையும் அறிய முயலவேண்டுமென வும் தயாசிறி இதன்போது குறிப்பிட்டார்.
இந்நிலையில் தயாசிறியின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருப்பதால் அவரை அழைத்து இதுகுறித்து மேலும் தகவலை பெறுவது பற்றி தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு யோசனை செய்து வருவதாக அறியவருகிறது.