எனக்கு விளையாட வாய்ப்பு தாருங்கள்.. BCCI-க்கு யுவராஜ் சிங் கடிதம்.!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார் யுவராஜ் சிங். மேலும் இதுகுறித்து அவர் கூறியவை, இந்த விளையாட்டு எனக்கு போராடக் கற்றுக் கொடுத்தது. நான் வெற்றி அடைந்ததை விட அதிக முறை தோல்வி அடைந்து இருக்கிறது. இருந்தபோதிலும் நான் விட்டுக் கொடுக்கவில்லை.

இனிமேல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் வறுமையில் வாடும் குழந்தைகளின் நலனுக்காக என்னுடைய முழு கவனத்தையும் செலுத்த போகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் யுவராஜ் சிங் BCCI-க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் டி20 தொடர்களில் விளையாட அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். யுவராஜ் சிங் டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் டி20 மற்றும் ஐபிஎல் விளையாடுவாரா எந்த கேள்விக்கு BCCI தான் முடிவெடுக்க வேண்டும்.