தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் நடிகர் இமான் அண்ணாச்சி. சின்ன குழந்தைகளை வைத்து அவர் நடத்தும் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி மிக பிரபலம். அதன் இரண்டாவது சீசன் இன்னும் இரண்டு மாதங்களில் துவங்குகிறதாம்.
இந்நிலையில் இமான் அண்ணாச்சி அளித்துள்ள புதிய பேட்டியில் தன்னுடைய மனைவி பற்றி பேசியுள்ளார். இமான் ஒரு சிறிய பள்ளியில் தான் படித்தாராம், அதில் மொத்தமே இரண்டு ஆசிரியர்கள் தான் இருப்பார்களாம்.
அதில் ஒருவர் தான் பச்சமுத்து என்கிற ஆசிரியர். அவரது மகளை தான் இமான் அண்ணாச்சி காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.