இம்முறை இத்தனை ஸ்பெஷல் பிக்பாஸ் வீட்டில் உள்ளதா?

வருகிற 23ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை மூன்றாவது முறையாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சென்னை பூந்தமல்லி அடுத்த ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட பிக்பாஸ் வீடு தயார் நிலையில் உள்ளது. இந்தமுறை பிக்பாஸ் வீட்டில் பலமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த முறை போன்று இல்லாமல் இம்முறை தமிழக கலாச்சாரம், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஓவியங்களால் பிக்பாஸ் வீடு அழகுபடுத்தப்பட்டுள்ளது.

வீட்டின் கார்டன் பகுதியில் மிகப்பெரிய அளவிலான கோபுரம், மார்கெட், கடைவீதி, ஓவியங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பிக்பாஸ் 2-வது சீசனில் புதிதாக ஜெயில் அமைக்கப்பட்டிருந்தது. இம்முறை ஜெயிலுக்குள் பாத்ரூம் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டினுள் 10 தலைகொண்ட ராவணனின் உருவம் வரையப்பட்டுள்ளது. மேலும் ஒருபுறம் பேட்ட ரஜினியும், அதற்கு எதிரே ஆன்மீகவாதி ஸ்டைலில் கமல்ஹாசனும் அமர்ந்திருக்கும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.

வீட்டுக்குள் நுழையும் போது மேல் பகுதியில் அரிவாளுடன் வெட்ட கை ஓங்குவது போன்ற பொம்மை உள்ளது. லாரி மாடலில் கிச்சன், சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ போன்ற அலங்கார பொருட்கள் என இம்முறை கலர்புல் ஹவுஸாக மாறியுள்ளது. புகைபிடிக்கும் அறை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.