அதிர்ஷ்டம் உங்களை தேடி வர!

” பெண்கள் நாட்டின் கண்கள் ” என்று ஆயிரம் வசனங்கள் பேசினாலும் நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

ஆனால் இந்தியாவில்தான் பெண்களை லட்சுமியின் உருவம் என்று கூறுவார்கள். அதனால்தான் என்னவோ அவர்களை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

உண்மையில் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இல்லம்தான் அனைத்து செல்வங்களும் நிறைந்ததாக இருக்கும்.

பெண்களை மதித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வீட்டில்தான் லக்ஷ்மி தேவி வசிக்க விரும்புவார் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

பெண்களுக்கு கணவர்கள் கொடுக்கும் சில பரிசுகள் அவர்களின் இல்லத்திற்கு செல்வம் தேடிவரும் என்று கூறப்படுகிறது. செல்வத்தை ஈர்க்க மனைவிக்கு என்னென்ன பரிசு கொடுக்கவேண்டும் என்று இந்த பதவில் பார்க்கலாம்.

சிவப்பு நிற துணி

கணவன் மனைவிக்கு சிவப்பு நிற துணியை பரிசாக கொடுக்க வேண்டும். இது அவர்களுக்கு இடையேயான காதலை மட்டும் அதிகரிப்பதில்லை, இது லட்சுமி தேவியை ஈர்க்கும் ஒரு விஷயமாகும்.அந்த குடும்பத்திற்கு செல்வம் தேடிவரும்.

நகைகள்

அனைத்து பெண்களுக்கும் நகைகள் பிடிக்கும். நகை பரிசாக மட்டுமின்றி அது ஒரு முதலீடாகவும் இப்போது மாறியிருக்கிறது. கணவன் மனைவிக்கு பரிசாக நகையை கொடுக்கும்போது அது முதலீடாக மட்டுமின்றி லட்சுமியின் அருளையும் பெற்றுத்தரும்.

அலங்கார பொருட்கள்

கணவன் மனைவிக்கு அலங்கார பொருட்கள் வாங்கி தருவது அவர்களின் உறவை மேலும் வலிமையானதாக்கும். திருமணமான பெண் என்று அடையாளப்படுத்தும் குங்குமம், வளையல், பொட்டு போன்றவற்றை அடிக்கடி வாங்கிக்கொடுங்கள்.

மரியாதை

இந்த உலோக பரிசுகள் தவிர விலை கொடுத்து வாங்க இயலாத பெரிய பரிசு ஒன்று உள்ளது. அந்த பரிசுதான் அன்பும், காதலும். இந்த பரிசை மட்டும் கொடுத்து விட்டால் போதும் உங்கள் இல்லம் மகிழ்ச்சியானதாக மாறிவிடும். இப்படியிருக்கும் வீட்டில் லட்சுமி தேவி நிலைபெற்று இருப்பார். இது மட்டுமின்றி லட்சுமி தேவியை உங்கள் வீட்டிற்கு அழைக்கும் இரு வழிகளும் உள்ளது.